Manirathnam
Manirathnam

Manirathnam Film : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மணிரத்னம். இவர் தன்னோட கனவு படமான பொன்னியின் செல்வன உருவாக்க தயாராகிட்டு வர்றாரு.

கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய்னு இந்திய அளவில இருந்து பல நடிகர்கள் இந்த படத்தில இருக்காங்க.

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் இப்போ தீவிரமா நடந்திட்டு வர்ற நிலையில இதுக்கிடையில தன்னோட உதவியாளர் தனசேகர் இயக்கத்தில ஒரு படத்த மணிரத்னம் கதை, வசனம் எழுதி தயாரிச்சிட்டு வர்றாரு.

தொடர்ந்து தன்னோட படங்களுக்கு கவித்தமா பேர் வெக்கிற மணிரத்னம் இந்த படத்துக்கு வானம் கொட்டட்டும்னு பேர் வெச்சிருக்காரு.

இந்த படத்தில விக்ரம் பிரபு நாயகனா நடிக்கிறாரு. முன்னதா ஜி.வி.பிரகாஷும் இந்த படத்தில நடிக்கிறதா ஒரு தகவல் வெளியாகியிருந்த நிலையில அதை படக்குழு மறுத்திருக்காங்க.

குடும்ப உறவுகள மையப்படுத்தி உருவாகுற இந்த படத்தில விக்ரம் பிரபுவோட சகோதரியா ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்க மடோனா செபாஸ்டின் நாயகியா நடிக்கவிருக்காங்க.

பிரேமம் படம் மூலமா தமிழர்களோட மனதையும் கொள்ளையடிச்ச மடோனா அதுக்கப்புறம் தவறான கதை தேர்வுகளால காணாமலே போணாங்க.

இந்த நிலையில மணிரத்னத்தோட இந்த படம் மடோனாவுக்கும் பெயர் சொல்லும் ஒரு படமா அமையும்னு சொல்லப்படுது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here