Manimegalai Ramadan Celebration
Manimegalai Ramadan Celebration

கணவருடன் மணிமேகலை ரம்ஜான் கொண்டாடுவது குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

Manimegalai Ramadan Celebration : தமிழ் சிHussain ன்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் மணிமேகலை. தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் இவர் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த நடன இயக்குனரான உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

செல்லம் உனக்கு ஓகேன்னா நான் கட்டிக்கிறேன் உன்ன என கூறிய ரசிகர்.. பிக்பாஸ் காஜல் கொடுத்த நறுக் பதில் – என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

எதிர்ப்புகளைத் தாண்டி திருமணம் செய்து கொண்டாலும் திருமணத்திற்குப் பின்னர் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் நேற்று ரம்ஜான் என்பதால் தன்னுடைய கணவருடன் சேர்ந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

இது குறித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு முன்ன எல்லாம் நான் முஸ்லிம் கிட்ட பிரியாணி கேட்பேன். இப்போ எல்லாரும் என் கிட்ட பிரியாணி கேட்கிறாங்க ஒரே நகைச்சுவையா இருக்கு என கூறியுள்ளார்.

மணிமேகலையின் இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் நீங்க ரம்ஜான் கொண்டாடியது போலவே உங்கள் கணவருடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடி அந்தப் புகைப்படத்தையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.

இதனைப் பார்த்த மணிமேகலை ஆல்ரெடி நாங்க கொண்டாடி இருக்கோம்.. சமீபத்தில்கூட கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து கொண்டாடினோம். ஏற்கனவே அவருடன் தீபாவளி கொண்டாடின புகைப்படத்தை நான் பதிவிட்டு இருப்பேன். அதையும் பார்த்தீர்களானால் நான் சந்தோஷப்படுவேன் எனக் கூறியுள்ளார்.

மீண்டும் அந்த ரசிகர் உங்களது சுதந்திரம் பறிக்கப்படாமல் / பாதிக்கப்படாமல் இருந்தால் சந்தோஷம் தான் என கமெண்ட் செய்துள்ளார்.

https://twitter.com/ManickaveluS/status/1264967505967058950?s=19

இதனை பார்த்த இன்னொரு அதிகாரி பாத்துட்டு போ என மணிமேகலையும் அவரது கணவரும் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

இதனால் டுவிட்டரில் காரசாரமான விவாதம் நடந்துள்ளது.