Manimegalai Murukku Factory Opening
Manimegalai Murukku Factory Opening

ஒரே பாட்டில் தொழிலதிபரான வீடியோவை வெளியிட்டுள்ளார் மணிமேகலை.

Manimegalai Muruku Factory Opening : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. சன் மியூசிக் சேனல் மூலமாக அறிமுகமான இவர் தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

ரூம் முழுக்க பலூன்.. விதவிதமான கிப்ட், கிராமத்தில் செமயா பிறந்தநாள் கொண்டாடிய மணிமேகலை – வைரலாகும் வீடியோ!

கிராமம் ஒன்றிற்கு சென்றிருந்த மணிமேகலை அதன் பின்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதால் அங்கேயே இருந்து வருகிறார்.

கிராமத்தில் சிக்கிக்கொண்டு இருந்தாலும் சும்மா இல்லாமல் தினம் தினம் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

கல்யாணம் எதுக்கு பண்ணுவாங்க?? அவ எனக்கு துணை, சுமை இல்லை – வைரலாகுது சிம்பு வெளியிட்ட வீடியோ!

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு முறுக்கு அடுப்பை வடிவமைக்கும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

https://www.instagram.com/p/CAFpAh8nm0q/?igshid=11635z91j52gn

இதனையடுத்து தற்போது அந்த முறுக்கு பேக்ட்ரியை ஓபன் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மணிமேகலை முறுக்கு ஃபேக்டரி என்ற பெயரில் ஆல் வேர்ல்டு பிரைவேட் லிமிடெட் கம்பெனி என சார்ட்டில் எழுதி கடைக்கு முன்பாக வைத்துள்ளனர்.

சூரிய வம்சம் படத்தில் சரத்குமார் தொழிலதிபரானது போல இந்த படத்திலும் அதே பாட்டை பின்னணியில் ஒலிக்க வைத்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அதுபோல் மணிமேகலை சில தினங்களுக்கு முன்பு பக்கெட்டை வைத்து ஓவர் பில்டப் கொடுத்து விட்டு சாணி மொழுகிய வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.