போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அதற்கு கேப்ஷன் ஒன்றை கொடுத்து ரசிகர்களிடம் கலாய் வாங்கியுள்ளார் மணிமேகலை.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் தொகுப்பாளியாக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது விஜய் டிவிக்கு தாவி இருப்பவர் மணிமேகலை.
இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பக்கம் இவரும் இன்னொரு பக்கம் KPY தீனாவும் வானத்தை அண்ணாந்து பார்த்து கொண்டிருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார்.
கூடவே இது கேண்டிட் போட்டோ அதாவது இந்த போட்டோவை எடுத்தது எங்களுக்கே தெரியாது என கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் போஸை பார்த்தா அப்படி தெரியலையே என கலாய்த்தெடுத்து வருகின்றனர்.