குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற என்ன காரணம் என மணிமேகலை பேசியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் கோமாளிகளில் ஒருவராக பங்கேற்று இருந்தவர் மணிமேகலை. இந்த நிலையில் சமீபத்தில் இவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

தற்போது அளித்த பேட்டி ஒன்றில் இந்த வெளியேற்றத்திற்கு என்ன காரணம் என கேட்டதற்கு மழுப்பலாக பதிலளித்துள்ளார்‌.

நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியினை மிகவும் மிஸ் செய்கிறேன் என மட்டும் பதில் அளித்துள்ளார். மற்றபடி என்ன காரணம்? எதற்காக வெளியேறினேன் என்பது குறித்து பேசவில்லை.