Manickam Narayanan About Thala Ajith

அஜித் பணம் வாங்கியதற்கான ஆதாரம் உள்ளது என பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.

Manickam Narayanan About Thala Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் என்பவர் அஜித் தன்னிடம் 2 லட்சம் ரூபாய் பணம் வாங்கிவிட்டு திருப்பி தராமல் ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

தற்போது அவர் அஜித் 2 லட்சம் வாங்கியதற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

தல அஜித் அவர்களை அவமதிக்க வேண்டும் என நான் இப்படி செய்யவில்லை. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்வதாக கூறியுள்ளார்.