Mangalyam Song Record in YouTube

யூடியூபில் முதல்முறையாக 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது சிம்புவின் பாடல் ஒன்று.

Mangalyam Song Record in YouTube : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.

இந்த படத்தில் சிம்பு பாடி இருந்த மாங்கல்யம் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த பாடல் வீடியோ யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

சிம்புவின் திரைப்பயணத்தில் அவரது நடிப்பில் வெளியான படங்களின் பாடல்களை முதல் முறையாக 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற பாடலாக மாங்கல்யம் பாடல் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை சிம்புவின் தீவிர ரசிகர்கள் மிகுந்த உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.