Vinayagar

தோஷம் அகல:
▪ வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து, அன்றைய தினம் ஒன்பது கன்னி பெண்களுக்கு அன்னதானம், வஸ்திரதானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் அகலும். திருமணத்தடை நீங்கும்.

▪ நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து, இனிப்பு நெய்வேத்தியம் வைத்து, வழிபட்டு வந்தால் இழந்தவற்றை பெறலாம்.

▪ ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி தினத்தன்று 16 கன்னிப்பெண்களுக்கு ரவிக்கைத்துணி, வளையல், மஞ்சள், குங்குமம் கொடுத்து, வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் திருமணத் தடைகள் அகலும்.

▪ குழந்தைப்பேறுக்கு தயாராக இருப்பவர்கள், வல்லபகணபதி நெய்வேத்தியங்கள் படைத்து நல்ல குழந்தையை தர வேண்டும், என்று வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குறிப்பு:
விநாயகர் சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நமது கட்டை விரல் அளவைப் போல 12 மடங்கு அளவில் இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here