Mangai Vatral Rasam
Mangai Vatral Rasam

Mangai Vatral Rasam :

இரசம் வகைகளில் தக்காளி மற்றும் பருப்பு இரசம் மிகவும் பிரபலமானது மேலும் ருசியதும். அந்த வரிசையில் இந்த மாங்காய் வற்றல் இரசம் ரொம்ப ருசியாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

1. துவரம் பருப்பு – ½ கப்

2. மாங்காய் வற்றல் – 6

3. வெங்காயம் – 1

4. தக்காளி – 1

5. புளி – சிறிய உருண்டை

6. மிளகு, சீரக தூள் – 1 ஸ்பூன்

7. பூண்டு – 6 பல்

8. காய்ந்த மிளகாய் – 3

9. கடுகு, வெந்தயம் மற்றும் மஞ்சள் தூள் – சிறிதளவு

10. கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

11. எண்ணெய், உப்பு – தேவைக்கு

செய்முறை :

துவரம் பருப்பை குழையாமல் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மாங்காய் வற்றலை 10 நிமிடம் ஊற வைத்து கொள்ள வேண்டும். அடுத்து புளியை கொஞ்சம் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ள வேண்டும்.

பிறகு, வாணலில் 2 டம்ளர் நீர் விட்டு வேக வைத்த பருப்பு, வெங்காயம், தக்காளி மற்றும் மாங்காய் வற்றலை சேர்த்து வேக வைக்க வேண்டும்.

மாங்காய் வற்றலில் உப்பு இருப்பதால் இந்த இரசத்தில் உப்பின் அளவு பார்த்து குறைவாக சேர்க்க வேண்டும்.

அவை வேந்ததும் அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை கொஞ்சமாக சேர்க்க வேண்டும். பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விட வேண்டும்.

மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம் மிளகு-சீராக தூள், பூண்டு நசிக்கியது மற்றும் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொதிக்கும் ரசத்தில் போட வேண்டும். இரசம் கொதித்த பிறகு இறக்கும் போது அதில் கொத்துமல்லி இலை தூவி பரிமாறினால் சுவையான இரசம் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here