Mangai Pachadi
Mangai Pachadi

Mangai Pachadi : குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவாக இந்த மாங்காய் பச்சடி இருக்கிறது. இதில் எல்லா சுவையும் இருக்கிறது. புளிப்பு, இனிப்பு என சுவைகள் இருக்கிறது. இது சாதம் மற்றும் சப்பாத்திக்கு மேலும் சுவை சேர்கிறது.

தேவையான பொருட்கள் :

மாங்காய் – 1 மாங்காய் தோல் சீவி நறுக்கியது
வெல்லம் – துருக்கியது சிறுதளவு
எண்ணை – தேவையான அளவு
கடுகு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 2

செய்முறை :

கடாயில் எண்ணை ஊற்றி அதில் கடுகு போட்டு பொரிந்ததும் அதனுடன் மிளகாய் போட்டு பிறகு நறுக்கி வைத்து இருக்கும் மாங்காய், தண்ணீர் சேர்த்து வேக விட வேண்டும்.

நன்கு வெந்த பிறகு அதில் துருவி வைத்துள்ள வெல்லம் சேர்த்து கொதிக்க வேண்டும். மாங்காய் மற்றும் வெல்லம் நன்கு சேரும் வரை கை விடாமல் கிண்டி கொண்டே இருக்க வேண்டும்.
வெல்லமும் மாங்காயும் சேர்ந்து கொதித்ததும் வேறு பாத்திரதில் மாற்றினால் சுவையான மாங்காய் பச்சடி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here