Mandhana First place
Mandhana First place

Mandhana First place – இந்திய கிரிக்கெட் விளையாட்டு உலகில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருந்த நிலையில் இந்திய பெண்கள் அணி தங்களில் பங்கை சரியாக செலுத்தி பெண்களுக்கான இடத்தை விளையாட்டு உலகில் உருவாக்கி உள்ளனர்.

அதனை, நிரூபிக்கும் வகையில் ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்தியா வீராங்கனை முதலிடம் பிடித்து உள்ளார்.

மகளிர் ஒரு நாள் தரவரிசைப் பட்டியலை சனிக்கிழமை வெளியிட்டு உள்ளது. ஐசிசி மகளிர் ஒரு நாள் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தானா முதலிடம் பிடித்து உள்ளார்.

அண்மையில் நியூசிலாந்தில் நடந்து முடிந்த ஒரு நாள் தொடரில் 105, 90 ரன்களை விளாசினார் மந்தானா.

மேலும், அவருக்கு அடுத்து எல்ஸி பெரி,ஆஸ்திரேலியா வீராங்கனை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடதில் உள்ளனர்.

நமது இந்தியாவை சேர்ந்த மற்ற வீராங்கனைகள் மிதாலி ராஜ் 5-வது இடத்திலும், பந்து வீச்சாளர் பட்டியலில் மூத்த வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி நான்காம் இடத்திலும் உள்ளார்.

மேலும், பூனம் யாதவ், தீப்தி சர்மா இருவரும் 2,3-வது இடதிற்கு சென்றுள்ளனர். அதே சமயத்தில் ஆல் ரவுண்டர் பட்டியலில் தீப்தி 4-வது இடம் பிடித்து உள்ளார்.