Manchurin With Meal Makers :
Manchurin With Meal Makers :

Manchurin With Meal Makers :

மஞ்சூரியன் என்றாலே நிறைய வகை உண்டு. அதில் எல்லோருக்கும் கோபி மஞ்சூரியன் மிகவும் பிடித்தமானது.

மஞ்சூரியன் வகைகளில் மீல்மேக்கர் வைத்து செய்யும் வகையும் இப்போது அனைவருக்கும் பிடித்த வகை உணவாக மாறி வருகிறது.

தேவையான பொருட்கள் :

மீல்மேக்கர் – 1 கப்
கார்ன் மாவு – 3 தேக்கரண்டி
அரிசி மாவு – 1 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தயிர் – 2 தேக்கரண்டி
குடைமிளகாய் – 1
வெங்காயம் – 1
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
சில்லி சாஸ் – 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் – 2 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை :

மீல்மேக்கரை உப்பு போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு பிறகு குளிர்ந்த நீரில் அலசி, பிழிந்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதில் 2 தேக்கரண்டி சோள மாவு, அரிசி மாவு, மிளகு தூள் சிறிதளவு, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, இஞ்சி-பூண்டு பேஸ்ட் சிறிதளவு, தயிர் 2 தேக்கரண்டி போட்டு நன்றாக கலந்து விட வேண்டும்.

அதனை 15 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு மீல் மேக்கரை எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு சிறிய பாத்திரதில் தண்ணீர் ஊற்றி அதில் சோள மாவை நான்கு கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் இஞ்சி-பூண்டு விழுது சிறிதளவு போட்டு வதங்கியதும், அதில் வெங்காயம் சேர்த்து வதங்கியதும், அதில் குடைமிளகாய் போட்டு ஒரு வதக்கு வதக்கி பின் அதில் சோயா சாஸ், மிளகு தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கலரி விட்டு பிறகு, பொரித்து வைத்துள்ள மீல்மேக்கரை சேர்த்து அதனுடன் சோள தண்ணீரை ஊற்றி கலந்து விட்டு சிறிது நேரம் கழித்து இறக்கினால் சுவையான மஞ்சூரியன் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here