‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்தின் ‘வேட்டையன்’ படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை டி.ஜே. ஞானவேல் இயக்கியுள்ள நிலையில், லைகா தயாப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத்.
முன்னதாக, ரஜினிகாந்த்-அனிருத் காம்பினேஷனில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் அனைத்து பாடல்களும் மாஸ் காட்டி ரசிகர்களை சிறப்பாக கவர்ந்தன. அன்பை காட்டும் மற்றும் அதிரடி காட்டும் பாடல்களுக்கு சிறப்பான மெட்டமைத்திருந்த அனிருத், படத்தின் பிஜிஎம்மிலும் அதிரடி சரவெடியாக செயல்பட்டிருந்தார்.
இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதத்தில் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ‘லால் சலாம்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், படத்தில் மொய்தீன் பாய் என்ற ரஜினியின் கேரக்டர் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில், அடுத்ததாக ஜெய் பீம் என்ற கவனத்திற்குரிய படத்தை இயக்கியிருந்த டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் தற்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ன்ஸ் வேலைகளை படக்குழுவினர் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில், இந்தப் படததின் டப்பிங் வேலைகளையும் ரஜினிகாந்த் முடித்துக் கொடுத்துள்ளார். லைகா நிறுவன தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள்: போலி என்கவுண்டருக்கு எதிராக உருவாகியுள்ளதாக கூறப்படும் வேட்டையன் படத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும், மஞ்சு வாரியர், பகத் ஃபாசில், ரித்திகா சிங் உள்ளிட்டவர்களும் வேட்டையன் படத்தில் முன்னணி கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து, இந்தப் படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘மனசிலாயோ’ வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்து வருகிறது. இந்தப் பாடலில் ரஜினியுடன் இணைந்து மஞ்சு வாரியர், அனிருத் ஆகியோரும் சூப்பர் ஆட்டம் போட்டுள்ளனர்.
யூடியூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ள இந்தப் பாடல் தற்போது 11 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. இந்தப் பாடல் அனிருத்தின் முந்தைய பாடல்களின் சாயலை ஒட்டியுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வந்தாலும், அது குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல், தொடர்ந்து இந்தப் பாடலுடன் ரசிகர்கள் வைப் செய்து வருகின்றனர்.
எந்திர உலகிலும், ஒரு பாடல் என்பது பரபரப்பாய் வந்து மறைவதல்ல, அடிக்கும் புயலில் மயிலிறகாய் வருடுவது தானே.!