Manam Thedum Song

Manam Thedum Song : கிருஷ்ணம் படத்தில் இருந்து மனம் தேடும் என்ற வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வருகிறது.

கேரளாவில் உள்ள ஒரு கோடீஸ்வரருக்கு மூன்று பிள்ளைகள். அந்தக் குடும்பமே கிருஷ்ண பக்தர்கள் கொண்ட குடும்பம்.

இந்த குடும்பத்தை சேர்ந்த மூன்றாவது மகனுக்கு திடீரென இதயத்தில் கோளாறு ஏற்பட கடும் சிரமத்திற்கு பிறகு குருவாயூர் கிருஷ்ணன் அருளால் அறுவை சிகிக்சை செய்யப்பட்டு குணமாகினார்.

இந்த உண்மை சம்பவம் தற்போது ஒரு பக்தி படமாக கிருஷ்ணம் என்ற பெயரில் உருவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞனே ஹீரோவாக நடித்துள்ளார்.

இப்படம் உலகம் முழுவதும் இப்படத்தை ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனத்தின் மூலமாக PNB சினிமாஸ் தமிழகத்தில் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது.

இப்படத்தின் கதையைத் தயாரிப்பாளர் பி.என்.பலராம் எழுதியுள்ளார். திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கியிருப்பவர் தினேஷ் பாபு.

ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது மனம் தேடும் என்ற பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.