Mankatha 2 Tweet

Manaktha 2 Movie : ட்விஸ்டுடன் மங்காத்தா 2 அறிவிப்பை மறைமுகமாக வெங்கட் பிரபு வெளியிட்டு இருப்பதாக அஜித் ரசிகர்கள் ஆராவதாரத்துடன் கூறி வருகின்றனர்.

தல அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் மங்காத்தா. ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் இன்று வரை ரசிகர்களின் பேவரைட் படமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் வெங்கட் பிரபு தல அஜித்தை சந்தித்து பேசியுள்ளார். அந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

அந்த டீவீட்டில் உள்ள ட்விஸ்ட்டு தான் மங்காத்தா 2 அறிவிப்பு என அஜித் ரசிகர்கள் கூறுகின்றனர். எப்படினு தானே யோசிக்கிறீங்க.

வெங்கட் பிரபு டீவீட்டில் வாட் ஹாப்பன்டு என கூறி 9 டாட் வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மங்காத்தா 2-க்கும் 9 எழுத்து தான் அப்போ மங்காத்தா 2 உறுதி அதானே சொல்ல வரீங்க என கூறி வருகின்றனர்.

இதை வைத்து ரசிகர்களுக்கு எக்கசக்கத்துக்கும் மீம்ஸ்களை உலாவ விட்டு வருகின்றனர். எது எபப்டியோ மங்காத்தா 2 வந்தா எல்லாருக்கும் ஹாப்பி தான்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.