சீனு ராமசாமி, விஜய்சேதுபதி கூட்டணியில் வெளியான மாமனிதன் திரைப்படம் எப்படி இருக்கு என பார்க்கலாம் வாங்க. ‌

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் இதுவரை தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை என இன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் 4வது முறையாக கூட்டணி அமைத்து வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாமனிதன்.

ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான திரைக்கதை.. வெல்லுமா சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணி? மாமனிதன் விமர்சனம்

அதாவது மனிதனுக்குள் இருக்கும் மனிதமே மாமனிதன் என இப்படத்தை இயக்கியுள்ளார் சீனுராமசாமி.

படத்தின் கதைக்களம் : ஒரு ஊரில் ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் விஜய் சேதுபதி தன்னுடைய மனைவி காயத்ரி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தன்னுடைய குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்க ஆசைப்பட்டு அதற்காக விஜய் சேதுபதி எடுக்கும் முடிவு அவருடைய வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது. இதனால் அவர் எடுக்கும் முடிவு என்ன? இந்த முடிவால் இவருடைய குடும்பம் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறது என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் : படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி மானஷ்வி என குறைந்த அளவிலான கதாபாத்திரங்களே இடம்பெற்றுள்ளன. ஆனால் படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி.

தாறுமாறான பின்னணி இசை, மாஸான பஞ்ச் டயலாக் என எதுவும் இல்லாமல் அமைதியான கதைகளத்தோடு பயணிக்கிறது படத்தின் திரைக்கதை. ஒரு சாதாரண மனிதனைப் பற்றியும் அவரது குடும்பத்தைப் பற்றியும் கூறுகிறது இந்த படம்.

இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா என இருவரும் இணைந்து இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளனர். ஆனாலும் இருவரின் பாணியிலும் இந்த படத்தில் இசை இல்லை என்பது பெரிய மைனஸ்.

ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான திரைக்கதை.. வெல்லுமா சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணி? மாமனிதன் விமர்சனம்

பொதுவாக சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான படங்களின் பாடல்கள் தேசிய விருதுகளை பெறுவது வழக்கம். இந்த படத்தில் அப்படியான பாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை.

சீனு ராமசாமி வழக்கம் போல அவருடைய யதார்த்தமான கதை தளத்தின் மூலமாக இந்த படத்தை கொண்டு சென்றுள்ளார்.

விஜய் சேதுபதியின் மகளாக நடித்துள்ள மானஷ்வி அவருடைய நடிப்பில் தூள் கிளப்பியுள்ளார்.