கோமா நோயாளிக்கு ஜோடியாக வாணிபோஜன் நடித்துள்ள மலேசியா டு அம்னீசயா பட ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Malesia to Amnishiya Trailer : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் வைபவ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மலேசியா டு அம்னீசியா. இந்தப்படத்தில் வைபவ் கோமா நோயாளியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் வாணி போஜன்.

கோமா நோயாளிக்கு ஜோடியாக நடித்துள்ள வாணி போஜன் - நேத்து கட்டும் மலேசியா டு அம்னீசியா ட்ரைலர்

இந்த படத்தினை மங்கி மேன் கம்பெனி தயாரிக்க பிரேம்ஜி அமரன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குனர் ராதா மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் மே 28-ஆம் zee5 இணையதளம் வழியாக வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் எம்எஸ் பாஸ்கர், கருணாகரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.