Malavika Mohanan Video Chat With Master Team
Malavika Mohanan Video Chat With Master Team

மாஸ்டர் டீமுடன் வீடியோ காலில் பேசியதைக் குறித்து பதிவிட்ட மாளவிகா மோகனனை கலாய்த்த ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Malavika Mohanan Video Chat With Master Team : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று பரவி வருவதை தடுக்க தற்போது இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.

இதனால் வீட்டின் முடங்கிப் போயிருக்கும் மாஸ்டர் வீடியோ கால் மூலமாக பேசிக் கொண் டுள்ளனர். இதுகுறித்து மாளவிகா மோகனன் ட்விட்டர் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த போட்டோவை பார்த்த ரசிகர் ஒருவர் வீட்டில் கூட மேக்கப்பா? இதான் பெண்கள். விஜய் பாருங்க மேக்கப் இல்லாம கூலா இருக்காரு இதுதான் நாங்கள் என கமெண்ட் அடித்துள்ளார்.

இதனைப் பார்த்த மாளவிகா மோகனன் நக்கலாக எங்க மேட்டர் பத்தி கொஞ்சம் சொல்லு என்று கேட்டுள்ளார். மேலும் நோ மேக்கப், நோ பில்டர், நேச்சுரல் பியூட்டி டா என பதிவிட்டுள்ளார்.