நடிகர் விக்ரம் குறித்து மாளவிகா மோகனன் பகிர்ந்திருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமான இவர் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை மாளவிகா தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து உரையாடிய போது நடிகர் விக்ரம் குறித்த கேள்விக்கு மனம் திறந்து பதிலளித்திருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

அதில் அவர், தங்கலானைத் திரும்பிப் பார்க்கும்போது, ​​விக்ரம் சார் இல்லாத கடினமான பயணத்தை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு ஷாட்டிலும் எனக்கு அவர் உதவி செய்திருக்கிறார். அவர் தன்னலமற்றவர், தன்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும் மிகுந்த அக்கறை கொண்டவர், சக நடிகர்களை ஊக்குவிப்பவர். என்று கூறியிருக்கிறார். இவரது இந்த பதிவு விக்ரம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.