டுவிட்டரில் தனது ரசிகர்களுடன் அவ்வப்போது பேசிக் கொண்டிருக்கும் மாளவிகா மோகனன். ரசிகர் ஒருவருக்கு “ஐ லவ் யூ” சொல்லி ஷாக் கொடுத்திருக்கிறார். இந்தப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான “பேட்ட”படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து விரைவில் விஜயுடன் இணைந்து “மாஸ்டர்” மற்றும் தனுஷுடன் இணைந்து “மாறன்” போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். 

ஐ லவ் யூ சொன்ன மாளவிகா மோகனன் - வைரலாகும் பதிவு.

தற்போது முன்னணி நடிகையாக மாறி உள்ளது இவர் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில்  ரசிகர்களின் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருப்பார். அதேபோல் சமீபத்தில் தனது ரசிகர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர் தற்போது வெளியான கமல்ஹாசனின் “விக்ரம்” படத்தைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள் என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு விக்ரம் படம் ரொம்பவே புடிக்கும். என்னவொரு காஸ்டிங், என்னவொரு பிஜிஎம் என பாராட்டித் தள்ளி உள்ளார்.

ஐ லவ் யூ சொன்ன மாளவிகா மோகனன் - வைரலாகும் பதிவு.

இதனைத் தொடர்ந்து மற்றொரு ரசிகர் மாளவிகா மோகனனிடம் நைசக நீங்க எனக்கு “ஐ லவ் யூன்னு மட்டும் சொல்லுங்க”.. அதை என் பெட்ரூம்ல பிரேம் போட்டு மாட்டி வைப்பேன் என்று சொன்னதும், உடனடியாக “ஐ லவ் யூ” சொல்லி அவருக்கு ஷாக் கொடுத்துள்ளார். அதன்பின் ரசிகர்களுடன் உரையாடி உள்ள பதிவை மாளவிகா மோகனன்  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.