Malavika Mohanan Salary for Next Movie
Malavika Mohanan Salary for Next Movie

லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் நயன்தாராவால் இத்தனை வருஷமாக வழங்க முடியாது சம்பளத்தை ஒரே படத்தில் வாங்க உள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Salary for Next Movie : தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் சசிகுமாருக்கு மனைவியாக நடித்து இருப்பார்.

இப்படத்தை தொடர்ந்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து மாளவிகா மோகனன் பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார். முன்னணி இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ள இவருக்கு இப்படத்திற்காக ரூபாய் 5 கோடி சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

உலக அளவில் வசூலை அள்ளிய டாப் 5 படங்கள் என்னென்ன? முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா?? – வசூல் விவரத்துடனான‌ லிஸ்ட் இதோ!

கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்களாக திரையுலகில் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நயன்தாராவே தற்போது தான் 3 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

இந்த நிலையில் மாளவிகா மோகனன் அவரை விட அதிகமாக அதாவது ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கி உள்ளது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்டர் படத்திற்கு பிறகு தன்னுடைய மார்க்கெட் கிடுகிடுவென இருக்கிறோம் என மாளவிகா போட்ட கணக்கு கொஞ்சமும் தப்பவில்லை என முணுமுணுக்கிறது கோலிவுட் வட்டாரம்.