Malavika Mohanan Reply to Mems Creators

தன்னைப்பற்றி மீம் போட்டவர்களுக்கு பதிலளித்துள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Reply to Mems Creators : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி உலக அளவில் வசூல் சாதனை பெற்று வருகிறது.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் மாளவிகா, ஆண்ட்ரியா, சாந்தனு என பல திரையுலக பிரபலங்கள் நடித்திருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.

இதன் காரணமாக அவர்களுக்கு பல மீம் களைப் போட்டு வரும் நெட்டிசன்கள் தற்போது மாளவிகா மோகனுக்கு ஒரு மீம் போட்டுள்ளனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அந்த மீமைப் பார்த்து என்னால் சிரிப்பு தாங்க முடியவில்லை, “நம்மளை பற்றி நாமே சிரிக்கவில்லை என்றால் போர் அடித்து விடும்” என்றும் கூறியுள்ளார்.

இந்தப் பதிவு மீம்ஸ் போட்டோ அவர்களுக்கு தக்க பதிலடியாக இருக்கும் என குறிப்பிட்டு வருகின்றனர்.