Malavika Mohanan Reaction to Master Cartoon
Malavika Mohanan Reaction to Master Cartoon

மாஸ்டர் கார்டூனால் மாளவிகா கடுப்பாகியதால் புதிய வெர்சனை வெளியிட்டுள்ளார் ரசிகர் ஒருவர்.

Malavika Mohanan Reaction to Master Cartoon : தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. மக்கள் சோசியல் டிஸ்டன்ஸ் பின்பற்ற வேண்டுமென அரசு கூறி வருகிறது.

இதனால் விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படக்குழுவினர் சோசியல் டிஸ்டன்ஸ் உடன் இருந்து வருவது போல கார்ட்டூன் புகைப்படம் ஒன்றை உருவாக்கியிருந்தனர்.

இது என்ன சோதனை : கைவிரித்த தயாரிப்பாளர்கள், வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்ட விஜய் – மாஸ்டர் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்.!

ஆனால் இந்த புகைப்படத்தில் மாளவிகா கிச்சனில் சமைத்துக் கொண்டிருப்பது போல இருந்தது அவரை கடுப்பேற்றி இருந்தது.

பெண்கள் என்றால் கிச்சனில் தான் கிடக்க வேண்டுமா என அவர் கோபத்துடன் பதிவிட்டு பிறகு எழுந்த சர்ச்சையால் அந்த பதிவை நீக்கியும் இருந்தார்.

இதனால் ரசிகர் ஒருவர் இந்த கார்ட்டூனின் புதிய வெர்சனை வெளியிட்டுள்ளார்.

இதில் மாளவிகா புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார். இதனை பார்த்துவிட்டு இது நன்றாக இருக்கிறது. எனக்கு புத்தகம் படிப்பது மிகவும் பிடிக்கும் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் என கேள்வி கேட்டுள்ளார்.