விஜய் மற்றும் தனுஷ் படத்தை தொடர்ந்து மாளவிகா மோகனன் யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Malavika Mohanan Pair With Ramcharan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கி இருப்பவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தில சசிகுமாரின் மனைவியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

விஜய் மற்றும் தனுஷ் படத்தை தொடர்ந்து மாளவிகா மோகனுக்கு அடித்த ஜாக்பாட் - யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா??

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் எனக்கு பெரிய அளவில் மவுசு இல்லை என்றாலும் விஜயுடன் இணைந்து நடித்த காரணத்தினால் அடுத்து தனுஷுக்கு ஜோடியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ள தெலுங்கு படத்தில் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் நடிகை மாளவிகா மோகனன். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.