விஜய் உடனான நட்பு குறித்து பேசியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Friendship With Vijay : தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் விஜய் உடன் சிறந்த நண்பர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

விஜயுடனான நட்பு.. விஜயா இப்படியெல்லாம் செய்கிறார்?? ஓபனாக பேசிய மாளவிகா மோகனன் - ரசிகர்கள் ஷாக்

தளபதி விஜய் உடனான நட்பு குறித்து மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது விஜய் சாருக்கு எப்போது போன் செய்தாலும் எடுத்து பேசுவார். அவரது வாயிலிருந்து ஒரு முறை கூட எதிர்மறையான விஷயம் எதுவும் வராது. எப்போதும் பாசிட்டிவ் ஆக இருப்பார் என கூறியுள்ளார். மேலும் நண்பர்களுக்கு ஏதாவது உதவி தேவை என்றால் உடனே செய்வார். எனக்கும் செய்வார் என்று பேசியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.