Malavika Mohanan Favourite Tamil Director
Malavika Mohanan Favourite Tamil Director

மாளவிகா மோகனன் தன்னுடைய ஃபேவரைட் தமிழ் இயக்குனர் யார் என்பது குறித்து பேசியுள்ளார்.

Malavika Mohanan Favourite Tamil Director : தமிழ் சினிமாவின சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை படத்தில் அறிமுகமாகி தற்போது மாஸ்டர் படத்தில் நடித்திருப்பவர் மாளவிகா மோகனன்.

இவர் நேற்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். மாளவிகா மோகன் இனிய பிறந்தநாள் விருந்தாக மாஸ்டர் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தது.

மேலும் இவரும் ரசிகர்களுடன் டுவிட்டர் பக்கத்தில் உரையாடினார். ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது ரசிகர்கள் தமிழ் சினிமாவில் உங்களின் ஃபேவரைட் இயக்குனர் யார் என கேட்டதற்கு இயக்குனர் வெற்றிமாறன் தான் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவருடன் இணைந்து ஒரு முறையாவது பணியாற்ற வேண்டும் என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்னதாக தனுஷுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என கூறியிருந்தார் மாளவிகா மோகனன். தனுஷ் அடுத்ததாக வெற்றிமாறன் படத்தில் நடிக்க உள்ளார் இவர்கள் இணையும் படத்தில் தான் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க ஆசைப்படுவதாக தற்போது தெரியவந்துள்ளது.

மாளவிகா மோகனன் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் ரசிகர்களோ இதுக்குத்தான் தனுஷ் கூட நடிக்கணும் என்று சொன்னீர்களா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.