விஜயுடன் இணைந்து மீண்டும் நடிக்க ஆசை உள்ளது அதுவும் தனுஷிடன் இணைந்து நடித்த அனுபவத்தை பதிவு செய்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

Malavika Mohanan About Vijay and Dhanush : தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

அதன் பிறகு விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்த இவர் தற்போது தனுஷுடன் இணைந்து மாறன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடியபோது விஜய் மற்றும் தனுஷ் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

விஜயுடன் மீண்டும் இணைந்து நடித்ததால் எப்படிப்பட்ட படத்தில் நடிப்பீர்கள் என கேட்க விஜய்யை காதல் படத்தில் பார்த்து ரொம்ப நாட்களாகி விட்டது. விஜயுடன் இணைந்து ஒரு காதல் படத்தில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.

மேலும் தனுசுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து கேட்டதற்கு நடிப்பைக் கற்றுக் கொண்டது போல இருக்கிறது. அவர் நல்ல ஒரு வழிகாட்டி என கூறியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி சொல்லுங்கள் என கேட்க அதற்காகத்தான் நானும் காத்திருக்கிறேன் எனவும் பதிலளித்துள்ளார். மேலும் சிங்கிளா கமிட்டடா என கேட்க சிங்கிள் தான் என பதிலளித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.