Malavika Mohanan About Master Trailer
Malavika Mohanan About Master Trailer

மாஸ்டர் படத்தின் டிரைலரை பார்த்ததாகவும் ட்ரைலர் எப்படி உள்ளது என்பது குறித்து மாளவிகா மோகனன் பேசியுள்ளார்.

Malavika Mohanan About Master Trailer : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

மங்காத்தா வெற்றிக்கு காரணம் இது தான் – நிகழ்ச்சி ஒன்றில் ஓபனாக பேசிய சூர்யா!

இந்தப் படத்தில் விஜயுடன் விஜய்சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம், சேத்தன், மகேந்திரன், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ரம்யா மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 9ம் தேதியே ரிலீசாக வேண்டி இருந்தது. ஆனால் பரவிவரும் குரானா வைரஸ் தாக்கம் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் அனைவரும் தற்போது இப்படத்தின் டிரைலருக்காக தான் காத்துக் கொண்டிருக்கின்றனர். டிரைலர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் அமைந்திருப்பதாக பிரபலங்கள் பலரும் கூறி வருகின்றனர்.

இப்போது தான் மெதுவா வெளியே வர தொடங்கி இருக்கோம்.. இனிமே இது கட்டாயம் – ரசிகர்களுக்கு மகேஷ் பாபுவின் அன்பு கட்டளை!

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக சென்னை வந்தபோது படத்தின் டிரைலரை பார்த்ததாக கூறியுள்ளார்.

மேலும் இந்த ட்ரெய்லர் விஜய் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருக்கும் என கூறிய அவர் ஒரு ரசிகையாக தனக்கும் புல்லரிக்க வைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.