Malavika Mohanan About Master

மீண்டும் மாஸ்டர் டீமுடன் இணைய வேண்டும் என பிரபல நடிகை கூறியுள்ளார்.

Malavika Mohanan About Master : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் புது படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் ஆகியோர் வில்லன்களாக நடிக்க மாளவிகா மோகணன் நாயகியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி என இரண்டு பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்தது சவாலாக இருந்தது. மீண்டும் மாஸ்டர் டீம் மற்றும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவதாக மாளவிகா தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.