Malavika Mohanan About Master

மாஸ்டர் படத்தை ரிலீஸ் பண்ணுங்கப்பா.. என புலம்பி வருகிறாராம் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan About Master : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். எடுத்த எடுப்பிலேயே தளபதி விஜய்க்கு ஜோடியானதால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் கிடைக்கும். அடுத்தடுத்து பல படங்கள் கிடைக்கும்.r முன்னணி நடிகையாக வலம் வரலாம் என பல கணக்குகளை போட்டுள்ளார்.

ஆனால் மாஸ்டர் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் மாளவிகா மோகன் எனக்கு அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. இதுவரை தனுஷ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்துள்ளது. இதுவே மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆகியிரந்தால் மாளவிகா மோகனன் லெவலே வேற தான் என கூறலாம்.

இதன் காரணமாக மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தை தியேட்டரில் இல்லாமலும் OTT வழியிலாவது ரிலீஸ் செய்யுங்கள் என நெருங்கிய வட்டாரங்களில் புலம்பி வருகிறாராம்.

நெட்ப்ளிக்ஸ் தளத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து படக்குழு திரையரங்குகளில் வெளியான பிறகே நெட்பிளக்ஸ் போன்ற இணையதளங்களில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.