Malavika Mohanan Latest Photos
Malavika Mohanan Latest Photos

தளபதி விஜய் முதல் முறையாக பார்க்கும்போது கொஞ்சம் வாய்ந்ததாகும் ஆனால் அடுத்த ஆறு மாதத்தில் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய நபராக அவர் இருப்பதாகவும் பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

Malavika Mohanan About First Meet With Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

மேலும் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

தளபதி விஜய்யின் பிறந்த நாளன்று பிரபலங்கள் பலரும் அவரைப் பற்றி பேசி வந்தனர். இப்படத்தின் நாயகியான மாளவிகா மோகனன் பதிவு ஒன்றில் விஜய் குறித்து பேசியுள்ளார்.

54 வயதாகும் பிரகாஷ் ராஜுக்கு இவ்வளவு குட்டி பையனா? – முதல் முறையாக இணையத்தில் வெளியான புகைப்படம்.!

அதாவது தளபதி விஜய் முதல் முறையாக மாஸ்டர் படத்தின் பூஜையும் சந்தித்த போது கொஞ்சம் தயக்கமும் நடுக்கமும் கூடவே பயமும் இருந்ததாக கூறியுள்ளார். மேலும் அந்த தினத்தில் அவருடன் நான் அதிகமாகப் பேசவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆறு மாதத்திற்குள் அவர் என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய நபராக மாறியுள்ளார். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து விடுவார். தயிர் சாத பிரியர் என தெரிவித்துள்ளார்.

மேலும் அதிவிரைவாக தூங்கச் சென்று விடுவார் எனவும் மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். அமைதியானவர், யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டார். ஆனால் கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விடுவார் என மாளவிகா தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CBvRNBTAJ7q/?igshid=z79oj1pj8qic

குடும்பத்துடன் இருக்கும் மாளவிகா மோகனன் புகைப்படம்