தனுஷுடன் பெட்ரூம் காட்சியில் எத்தனை டேக் எடுத்தீங்க என கேட்க அவருக்கு பதில் அளித்துள்ளார் மாளவிகா மோகனன்.
Malavika Mohanan About Act With Dhanush : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா மோகனன். இதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

மேலும் தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்த இந்த படத்தில் தனுஷுடன் பெட்ரூம் காட்சியில் நடித்திருந்தார். இந்த நிலையில் ரசிகர்களுடன் உரையாடிய போது தனுசுடன் முத்த காட்சியில் எத்தனை டேக் எடுத்தீங்க என கேட்க இந்தக் கேள்வியைக் கேட்கும் போது உங்களது மண்டைக்குள் எவ்வளவு மோசமான எண்ணம் இருக்கிறது என்பது தெரிகிறது என பதில் கொடுத்துள்ளார்.

மேலும் நீங்கள் ஒரு வேளை நடிக்க வரவில்லை என்றால் வேறு என்ன வேலைக்கு சென்று இருக்கிறீர்கள் என கேட்க சினிமாட்டோகிராபர் என பதிலளித்துள்ளார்.