மாஸ்டர் படத்தை இவங்க கூட தான் பார்க்கபோறேன்.! – மாளவிகா மோஹனன் ஓபன்டாக்

Malavika Live Chat with Fans : தமிழ் சினிமாவின் பேட்டை படத்தில் அறிமுகமாகி தற்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருப்பவர் மாளவிகா மோகனன்.

ஒளிப்பதிவாளர் மோகனன் அவர்களின் மகளான இவர் தெலுங்கு, இந்தி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்கள் என விதவிதமாக பதிவேற்றி வரும் மாளவிகா தற்போது லைவ் சேட்டில் ரசிகர்களுடன் உரையாடினார்.

பதட்டத்தோடு தான் இதை செய்தேன், ஆனால் இப்படி நடக்கும்னு எதிர் பார்க்கல – நடிகர் சாந்தனு வெளியிட்ட அறிக்கை!

ரசிகர்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்துள்ளார். அப்போது மாஸ்டர் படத்தின் அதிகாலை காட்சியை சென்னையில் ரசிகர்களுடன் பார்ப்பீர்களா என ரசிகர் ஒருவர் கேட்க நிச்சயம் உங்களோடு தான் பார்ப்பேன் என கூறியுள்ளார்.

மேலும் உங்களுக்கு பிடித்தமான உடையது என கேட்டதற்கு புடவைதான் என புடவையில் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மாஸ்டர் அப்டேட் கொடுங்க என கேட்டதற்கு இந்த மனிதரிடம் கேளுங்கள் என லோகேஷ் கனகராஜை கோர்த்து விட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பிடித்தமான இசையமைப்பாளர் யார் என கேட்டதற்கு அனிருத்தின் பெயரை கூறியுள்ளார்.