வலிமை பட அப்டேட் வெளியானதை அடுத்து மலையாள திரையுலக பிரபலங்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

Malaiyala Cinema Celebrates Valimai Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

60 இந்துக்கள் கட்டாய மதமாற்றம்

இந்த படத்தின் தலைப்பு மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில் கிட்டதட்ட 2 வருடங்களாக எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியானது.

இது அஜித் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. மலையாள திரையுலகை சேர்ந்த இயக்குனர் அருண் கோபி தலைமையில் வலிமை அப்டேட்டை மலையாள அஜித் ரசிகர்கள் கேக் வெட்டிக் கொண்டாடி உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை நிரஞ்சனா கலந்து கொண்டுள்ளார்.

மன்றத்தை கலைத்து அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.