தற்கொலை என்பது கோழைகள் எடுக்கும் வீரமான முடிவல்ல; அது பொறுத்து மெதுவாக கையாளப்பட வேண்டிய தீர்வு. ஆண்டி முதல் அரசன் வரைக்கும் இந்நிலை பொருந்தும்.
இந்நிலையில், பாலிவுட் நடிகையும், மாடலுமான மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா, தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது, இவரின் உடலை கைப்பற்றிய போலீசார், தற்கொலைக்கான பின்னணி குறித்து விரிவாக விசாரணை செய்து வருகின்றனர். இவரது தற்கொலை குறித்து வெளியாகியுள்ள தகவலில், மலைகா அரோராவின் பெற்றோர், அனில் அரோரா மற்றும் ஜாய்ஸ் பாலிகார்ப் ஆகியோர், பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள ஆயிஷா மேனரில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் அவர் தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
மேலும், இவருடைய உடல், பாபா மருத்துவமணியாக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அனில் அரோராவின் திடீர் மரணத்திற்கான பின்னணி குறித்து தற்போது வரை எந்த காரணமும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
மலாக்கா அரோராவின் தாயார் ஜாய்ஸ் பாலிகார்ப் ஒரு மலையாளி கிறிஸ்தவர், அதே சமயம், அவரது தந்தை அனில் அரோரா, இந்திய எல்லைக்கு அருகில் உள்ள ஃபசில்கா என்ற நகரத்தைச் சேர்ந்த பஞ்சாபி இந்து, இந்திய வணிகக் கடற்படையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்றும் எந்நிலையிலும், வாழ்க்கை என்பது வாழ்வதற்கே, வீழ்வதற்கல்லவே.!