Makkal in Nayagi Award For VJ Chithra

மறைந்த VJ சித்ராவிற்கு சின்னத்திரையில் விருது வழங்கியுள்ளனர்.

Makkal in Nayagi Award For VJ Chithra : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் விஜே சித்ரா.

தொகுப்பாளினியாக தன் பயணத்தைத் தொடங்கி சின்னத்திரையில் தனக்கென ஒரு நீங்கா இடம் பிடித்து இருந்தவர் சித்ரா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றும் கூறலாம்.

இப்படியான நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 ஸ்டார் ஓட்டல் ஒன்றில் தன் கணவருடன் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் சித்ரா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இப்படியான நிலையில் தற்போது சின்னத்திரையில் விருது வழங்கும் விழாவில் நடிகை சித்ராவிற்கு மக்களின் நாயகி என்ற விருது வழங்கியுள்ளது. இந்த விருது சித்ராவின் ரசிகர்களிடையே மன நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.