Major Changes in Asuran Remake
அசுரன் தெலுங்கு ரீமேக்கில் படக்குழு மிக பெரிய மாற்றத்தை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

Major Changes in Auran Remake : தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடி வெற்றி விழா கொண்டாடப்பட்ட திரைப்படம் அசுரன்.

தற்போது இந்த படம் தெலுங்குவில் ரீமேக்காகி வருகிறது, தனுஷ் வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சுவாரியர் வேடத்தில் ப்ரியாமணி நடிக்கிறார்.

நேற்று தான் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இருந்தன, இந்நிலையில் தற்போது இப்படத்தில் செய்யப்பட்டுள்ள பெரிய மாற்றம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அசிங்கமான வார்த்தையோடு கஸ்தூரியை திட்டிய அஜித் ரசிகர்.. அவர் கொடுத்த பதிலை பாருங்க.!

அதாவது அசுரனின் பிளாஷ் பேக் காட்சியில் உயர் சாதியினர் கீழ் சாதியினரின் வீடுகளை தீயிட்டு கொளுத்தி தனுஷ் குடும்பத்தை அழித்து விடும் காட்சி இடம் பெற்றிருக்கும்.

தெலுங்குவில் இந்த காட்சிக்கு பதிலாக ஆந்திராவில் உண்மையில் நடந்த ஜாதி கலவரத்தை காட்சியாக சேர்த்துள்ளார்களாம்.

ஆம், ஓர் ஊரில் கீழ் சாதியினர் குடிக்கும் குடிநீர் தொட்டி நீரில் மேல் ஜாதியினர் மாடுகளை கழுவ இதனை தட்டி கேட்ட பெண்ணை மேல் சாதியினர் தாக்க திரும்ப அந்த பெண் அவர்களை வாளியால் தாக்கியுள்ளார்.

அதன் பின்னர் இந்த சம்பவம் ஜாதி கலவரமாக மாறி கொலைவெறி தாக்குதல் வரை சென்றுள்ளது, இதில் கீழ்சாதியினர் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேல் ஜாதியினருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தது.

இந்த உண்மை சம்பவத்தை தான் தெலுங்கு அசுரன் பிளாஷ்பேக்கில் இணைந்துள்ளார்களாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.