மைனா நந்தினியின் மகன் க்யூட்டாக பாட்டு பாடும் வீடியோ வை மைனா தனது யூடியூப் சேனலில்  வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ ஆவதற்கு பலரும் இலைகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உள்ள பிரபல சீரியலான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் “மைனா” என்ற பெயருடன் அறிமுகமானவர்தான் நந்தினி. இவரின் கலகலப்பான பேச்சாலும் எதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களின் மத்தியில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டார். இதனைத் தொடர்ந்து  பல சீரியல்களில் நடித்துள்ள இவர் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் இணைந்து நடித்த “கேடி பில்லா கில்லாடி ரங்கா”என்ற திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

க்யூட்டாக பாட்டு பாடும் மைனா நந்தினியின் குட்டி ஹீரோ - வைரலாகும் வீடியோ.

இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர். அவரின் முதல் கணவர் இறந்தபின் சீரியல் நடிகரும், நடன இயக்குனருமான “லோகேஸ்வரன்” என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அதன்பின் இவர்களுக்கு “துருவன்” என்ற ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

க்யூட்டாக பாட்டு பாடும் மைனா நந்தினியின் குட்டி ஹீரோ - வைரலாகும் வீடியோ.

சிறு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு ரி என்ட்ரி ஆன மைனாஅவர் கணவருடன் சேர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபல தம்பதியினராகவே மாறியுள்ளனர். அதையடுத்து மைனா நந்தினி யூடியூபில் “மைனா விங்ஸ்” என்ற ஒரு சேனலை  நடத்திவருகிறார். 

க்யூட்டாக பாட்டு பாடும் மைனா நந்தினியின் குட்டி ஹீரோ - வைரலாகும் வீடியோ.

இதில் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் செய்யும் காமெடி வீடியோக்கள் மற்றும் அவர்களின் போட்டோ சூட் வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டிருப்பார். அந்த வகையில் தற்போது நந்தினியின் மகன் க்யூட்டாக பாட்டு பாடும் வீடியோ ஒன்றை அதில் பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பல லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dhruvan Singing Skills 😂❤️ | Myna Wings #Shorts