Mahesh Babu Review for Soorarai Pottru

சூரரைப் போற்று படம் பார்த்து சூர்யாவை புகழ்ந்து தள்ளியுள்ளார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு.

Mahesh Babu Review for Soorarai Pottru : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் சூரரைப் போற்று.

சுதா கொங்கரா இயக்க ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களது விமர்சனத்தை பதிவு செய்து சூர்யாவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். தல அஜித், தளபதி விஜய் ஆகியோர்கள் கூட தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்ததாக கூறப்பட்டு வந்தது.

செம.. கலக்கிட்டீங்க.. சூரரைப் போற்று படம் பார்த்து சூர்யாவை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் - வைரலாகுது விமர்சனம்

இப்படியான நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சூரரைப்போற்று படம் குறித்து பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில் சூரரைப் போற்று திரைப்படம் இன்ஸ்பிரேஷனான திரைப்படம். பிரில்லியன்ட் டைரக்சன் மற்றும் அற்புதமான நடிப்பு. சூர்யா கலக்கிட்டீங்க என குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் இந்த விமர்சனத்தால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பிரபலங்கள் தொடர்ந்து சூரரைப்போற்று படத்தை பாராட்டி வரும் காரணத்தினால் டுவிட்டரில் #UnstoppableSuriya என்ற ஹாஸ்டேக் டிரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது.