Mahesh Babu in Thalapathy 65
Mahesh Babu in Thalapathy 65

தளபதி 65 திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மகேஷ்பாபு நடிக்க இருப்பதாக வெளியான தகவலுக்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

Mahesh Babu in Thalapathy 65 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படம் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள விஜய் 65 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சவாலை ஏற்று தளபதி விஜய் மரக்கன்று நட்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

சவாலை நிறைவேற்றிய விஜய்.. மகேஷ் பாபு கொடுத்த கமெண்ட்..!

இதனையடுத்து முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யும் மகேஷ் பாபுவும் இணைந்து தளபதி 65 படத்தில் நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இதுகுறித்து படக்குழுவினரிடம் விசாரிக்கும் போது இந்த தகவல் முற்றிலும் பொய். மகேஷ்பாபுவின் சவாலை விஜய் ஏற்றதால் இவ்வாறு வதந்தியை பரப்பி விட்டிருக்கிறார்கள் என படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

விஜய், மகேஷ் பாபு ஆகிய இருவரும் ஸ்டைலும் ஒரே மாதிரி இருக்கும் என்பதால் இவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்தால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

ரசிகர்களின் இந்த ஆசை எப்போது நிறைவேறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.