இரண்டு மாதங்களுக்கு சினிமாவுக்கு டாட்டா சொல்லி உள்ளார் நடிகர் மகேஷ் பாபு.

Mahesh Babu in Health Issue Details : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி திரையுலகில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன. முருகதாஸ் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இவர் நடித்த ஸ்பைடர் திரைப்படம் தோல்வியை தழுவியது.

பவானி கூடுதுறையில் பரிகார பூஜை : பொதுமக்களுக்கு அனுமதி

அதன் பிறகு தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வரும் மகேஷ்பாபு இரண்டு மாத காலத்திற்கு சினிமாவிலிருந்து விலகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த சில வருடங்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் சர்க்காரு வாரி பாட்டா என்ற தெலுங்கு படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தபோது மூட்டு வலி அதிகமானது.

உங்க பொண்ணு Guest Role நடித்தது ஏன் Director Priyadarshan Reveals Marakkar Movie Secrets

இதனால் இவருக்கு அமெரிக்காவில் விரைவில் மூட்டு அறுவைச் சிகிச்சை நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு இரண்டு மாதங்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மகேஷ் பாபு ரசிகர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.