Mahendran With JD Cat

மாஸ்டர் JD-ன் பூனையுடன் குட்டி பவானி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mahendran With JD Cat : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு முன்னதாக விஜய் மாஸ்டர் என்ற படத்தில் நடித்திருந்தார். ‌‌

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். விஜய் சேதுபதியின் சிறு வயது வேடத்தில் நடித்திருந்தவர் மாஸ்டர் மகேந்திரன்.

இவர் மாஸ்டர் படத்தில் விஜயிடம் வளர்ந்த பூனைக்குட்டியுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.