mahendran death

Mahendran Death : இயக்குனர் மகேந்திரனின் மறைவிற்கு முன்னணி நடிகர் நடிகைகள் ட்விட்டரில் கூட இரங்கல் தெரிவிக்கவில்லை. அவை யார் யார் என்பதை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் மாபெரும் இயக்குனர், தனித்துவமான படங்களை கொடுத்து மிக பெரிய இடத்தை பிடித்தவர் மகேந்திரன்.

இவர் நேற்று அதிகாலை உடல்நல குறைவால் அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழ் திரையுலகில் மிக பெரிய சோகத்தையும் இழப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

வளர்ந்து வரும் நடிகர், நடிகைகள், மகேந்திரனுடன் இணைந்தோ அல்லது அவரது இயக்கத்திலோ நடிக்காத நடிகர்கள் கூட மகேந்திரனின் மறைவிற்காக ட்விட்டரில் வருத்தம் தெரிவித்து இருந்தனர்.

ஆனால் தன்னுடன் தெறி படத்தில் இணைந்து நடித்திருந்தும் தளபதி விஜய் ட்விட்டரில் கூட இரங்கல் தெறிக்கவில்லை. அதே போல் தல அஜித்தும் வழக்கம் போல வாய் திறக்காமலே இருந்து விட்டார்.

இன்னும் 100 வருடங்கள் வாழ்வார் மகேந்திரன் – திரை பிரபலங்கள் ட்விட்டராஞ்சலி

மேலும் விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால், சிம்பு, முன்னணி இசையமையாளர்கள் சிலரும் வருத்தம் தெரிவிக்கவில்லை.

இவர்களை போலவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர்கள் கூட வாய் திறக்கவில்லை.

தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் முக்கிய நபராக இருந்த மகேந்திரன் அவர்களுக்கு வளர்ந்து விட்ட நடிகர், நடிகைகளே வருத்தம் தெரிவிக்காதது அவர்களுக்கு தான் மரியாதை குறைவு.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.