Mahendran About Master Teaser

டீசருக்கு இப்படினா ட்ரெய்லரை பார்த்தால் என்ன ஆகுமோ என ஒரு வெறித்தனமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மாஸ்டர் பட நடிகர் மகேந்திரன்.

Mahendran About Master Teaser : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் ஆண்ட்ரியா ஆகியோர் வில்லன் வில்லி வேடத்தில் நடிக்க சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தளபதி விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக வெளியாகி ரசிகர்களை பெருமளவு கொண்ட வைத்தது. தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் டீஸருக்கு வெளிநாட்டு நபர்கள் இருவர் ரியாக்சன் கொடுத்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மாஸ்டர் மகேந்திரன் மாஸ்டர் டீசர் பார்த்ததற்கே இப்படி ட்ரெய்லர் பார்த்தால் என்ன ஆவாங்களோ என பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ