Mahath With ThalaThalapathy

தல தளபதியுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு பழகிய நினைவுகளை பகிர்ந்துள்ளார் பிரபல நடிகர்.

Mahath With ThalaThalapathy : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவருடனும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை பல்வேறு நடிகர்களுக்கு உண்டு.

அந்த வகையில் தல அஜித் மற்றும் தளபதி விஜய் என இருவருடனும் இணைந்து நடித்த நடிகர்களில் ஒருவர் மஹத் ராகவேந்திரா. சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர் தல அஜித்துடன் மங்காத்தா மற்றும் தளபதி விஜயுடன் ஜில்லா உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தார்.

படப்பிடிப்பின்போது அஜித் விஜய் இருவரும் சந்தித்துக்கொண்ட போது அவர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மஹத்.