பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு யாஷிகாவுடன் காதல் வலையில் விழுந்ததும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து கொண்டு பேயாட்டம் ஆடியதையும் யாரும் மறந்திருக்க முடியாது. சில சமயங்களில் யாஷிகாவிடம் செய்த செயல்கள் ரசிகர்கள் வெறுப்படைய செய்திருந்தன.

மேலும் சிம்புவை பற்றி தவறாக எந்த பேச்சுகளும் கிளம்பாத நேரத்தில் மஹத்தால் சிம்புவின் நண்பன் தானே அப்படி தான் இருப்பார் எனவும் நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கி இருந்தனர்.

இந்நிலையில் தற்போது மஹத் பியா பாஜிபாய்க்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி விமர்சிக்க வைத்துள்ளது. 2013-ம் ஆண்டு மஹத், பியா பாஜிபாய் நடிப்பில் தெலுங்குவில் வெளியாகி இருந்த படம் பேக் பெஞ்ச் ஸ்டுடென்ட்.

இந்த படத்தில் இடம் பெற்றிருந்த லிப் லாக் காட்சி தான் இந்த புகைப்படம். இதனை பார்த்த நெட்டிசன்கள் மஹத் அப்பவே அப்படி தானா, இப்போ சொல்லவா வேணும் என விமர்சித்து வருகின்றனர். மேலும் யாஷிகாவுடன் அடித்த லூட்டியையே பெரியதாக எடுத்து கொள்ளாத மஹத் காதலி பிராச்சி இதையா பெரியதாக எடுத்து கொள்ள போகிறார் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.