Mahat Wedding Party Video
Mahat Wedding Party Video

திருமணக் கோலத்தில் மனைவியுடன் மகத் போட்ட ஆட்டம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Mahat Wedding Party Video : தமிழ் சினிமாவில் உங்காத்தா ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் மகத். சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

இவர் செய்ய.. அவன் பார்க்க, ஒரே ஜாலி தான் – பார்ட்னருடன் வொர்க் அவுட் வீடியோவை வெளியிட்ட அஞ்சலி!

நடிகை மும்தாஜிடம் மோசமாக சண்டையிட்டு ரெட் கார்டுடன் இவர் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் 2 பிறகு சிம்புவுடன் இணைந்து வந்தா ராஜாவாகத் தான் வருவேன் என்ற படத்தில் நடித்தார்.

மேலும் இவர் கடந்த வருடம் அவரது காதலியான பிராச்சியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் சிம்பு அனிருத் என்ன ஒரு சில திரையுலக பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது மகத்தின் மனைவி பிராச்சி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண விழாவில் அவரும் மகத்தும் இணைந்து நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

செல்லம் உனக்கு ஓகேன்னா நான் கட்டிக்கிறேன் உன்ன என கூறிய ரசிகர்.. பிக்பாஸ் காஜல் கொடுத்த நறுக் பதில் – என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

இதுவரை வெளிவராத வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதனை ஷேர் செய்து லைக்ஸ் ‌கொடுத்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ

சமீபத்தில் மகத்துடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.