ஆண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ள நடிகர் மகத் ராகவேந்திரா.

Mahat and Prachi Blessed with Boy Baby : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மஹத். நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கேற்றார். தற்போது சிம்புவுடன் இணைந்து மாநாடு படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆண் குழந்தைக்கு அப்பாவான மகத்.. இணையத்தில் வைரலாகும் குழந்தை புகைப்படம்

இந்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருந்து வந்த மஹத் மனைவி பிராய்ச்சி அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மஹத் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு மகன் பிறந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.