பணத்துக்காக நடந்த திருமணம் என பலரும் மகாலட்சுமியை விமர்சனம் செய்து வந்த நிலையில் தனது சம்பளம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் மகாலட்சுமி.

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது அன்பே வா சீரியல் வில்லியாக நடித்து வருபவர் மகாலட்சுமி. பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த இவர் முதல் கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரனை காதல் திருமணம் செய்து கொண்டார்.

பணத்துக்காக நடந்த திருமணமா?? கோபத்தில் தன்னுடைய மொத்த சம்பள விஷயத்தை போட்டு உடைத்த மகாலட்சுமி - எவ்வளவு தெரியுமா?

இரண்டு குடும்பத்தார் முன்னிலையில் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. ஆனால் மகாலட்சுமி பணத்துக்காக எதையும் செய்வார் அப்படி பணத்துக்காக ஆசைப்பட்டு தான் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார் என அவரை சுற்றி பல நெகட்டிவ் விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன.

பணத்துக்காக நடந்த திருமணமா?? கோபத்தில் தன்னுடைய மொத்த சம்பள விஷயத்தை போட்டு உடைத்த மகாலட்சுமி - எவ்வளவு தெரியுமா?

இதனால் கோபமான அவர் பேட்டி ஒன்றில் பணத்துக்காக நான் திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நான் நடித்து வரும் சீரியல்கள் மூலம் எனக்கு மாதம் மூன்று லட்சம் ரூபாய் சம்பளம் வருகிறது என வெளிப்படையாக பேசியுள்ளார். இவருடைய இந்த பேட்டி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.