நாளை விக்ரம் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட் காத்துக் கொண்டு இருப்பதாக மகான் திரைப்படக் குழு அறிவித்துள்ளது.

Mahaan Single Track Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவர் தன்னுடைய மகன் துருவ் விக்ரம் உடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தான் மகான். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருந்த இந்த படத்தில் இருந்து அவர் திடீரென விலக்கிக் கொண்டதால் அவருக்கு பதிலாக அனிருத் இசையமைக்கிறார்.

புரட்டாசி மாத விரதங்கள்.!

நாளை விக்ரம் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது தரமான ட்ரீட் - மகான் படத்தில் இருந்து வெளியான அறிவிப்பு

ஏற்கனவே சியான் விக்ரம் பத்து கைகளுடன் இருக்கும் போஸ்டரும் அனகோண்டா பாம்பு உடன் துருவ் விக்ரம் இருக்கும் போஸ்டரும் வெளியானது. இவற்றைத் தொடர்ந்து தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கோவிலில் விவாகரத்து குறித்து கேட்ட செய்தியாளர் – கடுப்பாகி சீறிய Samantha! | Latest Cinema News

அதாவது இந்த படத்திலிருந்து சூறையாட்டம் என்ற பாடல் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.